தமிழ்நாட்டில் திமுக ஆட்சி நிரந்தரமாக தொடர்ந்திட வேண்டும்: முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு

 
MKS

தமிழ்நாட்டில் நிரந்தரமாக திமுக ஆட்சி தொடர வேண்டும் என்று முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களிடம் கேட்டுக்கொண்டார்.

தந்தை பெரியார் பிறந்த நாள் செப்டம்பர் 17, திமுகவைத் தோற்றுவித்த பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் செப்டம்பர் 15. திமுக தோற்றுவிக்கப்பட்ட நாள் செப்டம்பர் 17. இம்மூன்றையும் ஒன்றிணைத்து முப்பெரும் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி அண்ணா அறிவாலயத்தில் சமூக இடைவெளியுடன் திமுக முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் கட்சிக்காக உழைத்த முன்னோடிகளுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

பின்னர் விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,  “கட்சிக்காக உழைத்தவர்களை பெருமைப்படுத்துவதற்காக அண்ணா பிறந்தநாளான இன்று முப்பெரும் விழா நடத்தப்படுகிறது.

DMK

தமிழ்நாட்டில் 6-வது முறையாக திமுக ஆட்சி அமைத்துள்ளது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சி என்பது எந்த பலனையும் எதிர்பார்க்காமல் உழைத்த தொண்டர்களால் விளைந்தது. தமிழ்நாட்டில் நிரந்தரமாக திமுக ஆட்சி தொடர்ந்திட நாம் பணியாற்ற வேண்டும். மாதந்தோறும், சட்டப்பேரவையில் நான் அறிவித்த ஒவ்வொரு திட்டம் குறித்தும் ஆய்வு செய்வேன்.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு துறையிலும் விடியல் பிறக்க வேண்டும். திமுகவுக்கு வாக்களிக்காதவர்கள் கூட நாம் திமுகவுக்கு வாக்களிக்காமல் விட்டுவிட்டோமே என்று வருத்தப்படும் அளவிற்கு நாம் களப்பணியாற்ற வேண்டும்” என்றார்.

From around the web