சைக்கிளில் சென்று அதிரடியாக ஆய்வு நடத்திய மாவட்ட ஆட்சியர்..! குவியும் பாரட்டுக்கள்!!

 
Pudukottai-collector-kavitha-ramu

புதுக்கோட்டை நகரில் உள்ள முக்கிய பகுதிகளில் சைக்கிளிலேயே பயணம் செய்து மாவட்ட ஆட்சியாளர் கவிதா ராமு ஆய்வு மேற்கொண்டார்.
 
தமிழ்நாட்டில் உருமாறிய ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று பரவலானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒமைக்ரான் பாதிப்பை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழ்நாட்டில் கடந்த 6-ந் தேதி முதல் இரவு ஊரடங்கு அமலபடுத்தப்பட்டுள்ளது.

அந்தவகையில் முழு ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியாளர் கவிதா ராமு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

புதுக்கோட்டை நகரில் உள்ள முக்கிய பகுதிகளுக்கு சைக்கிளிலேயே பயணம் செய்து, தனியாக ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, சாலையில் முகக்கவசம் அணியாமல் சென்ற இளைஞர்களுக்கு அறிவுரை கூறி வீட்டை விட்டு வெளியேறும் போது முகக்கவசம் அணியுங்கள். உங்கள் பாதுகாப்புக்கு அது நல்லது என்று அறிவுரை வழங்கினார். மாவட்ட ஆட்சியரின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

From around the web