மாணவர்களுக்கு சிரமத்தை குறைக்கும் வகையில் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு, எளிமைப்படுத்தப்படும் - திண்டுக்கல் ஐ லியோனி

 
Leoni

மாணவர்களுக்கு தேவையற்ற சிரமத்தை குறைக்கும் வகையில் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு, எளிமைப்படுத்தப்படும் என தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத்தின் தலைவர் திண்டுக்கல் ஐ லியோனி தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றதிலிருந்து ஆட்சி அதிகாரிகள் பலர் மாற்றப்பட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியக தமிழ்நாடு அரசு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத் தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி நியமிக்கப்பட்டார்.

இதற்கு எதிர்க்கட்சியினர் பலர் கடும் அதிருப்பதி தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இன்று (ஜூலை 12) காலை பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத் தலைவராக லியோனி பொறுப்பேற்றுக்கொண்டார். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய லியோனி, ஆசிரியர் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று 2011ம் ஆண்டு கீழே வைத்த பாட புத்தகத்தை 10 ஆண்டுகள் கழித்து 2021ல் மீண்டும் கையில் எடுத்துள்ளதாக தெரிவித்தார். பாடநூல்களை மாணவர்கள், விரும்பி மகிழ்ச்சியாக படிக்கும் வகையில் மாற்றுவதே தனது நோக்க என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், தான் மாணவராக இருந்த காலக்கட்டத்தில் அறிஞர் அண்ணாவின் பேச்சு பாடத்திட்டத்தில் வைக்கப்பட்டிருந்ததாக குறிப்பிட்டார். ஒன்றாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில் கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை சேர்ப்பது குறித்து முதல்வரிடம் பேசி முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார்.

From around the web