விஜய் மக்கள் இயக்கம் வெற்றி பெற்றதா? உறுதிப்பாடு இல்லாத உரிமை கோரல்கள் அபத்தம்!!

 
விஜய் 5 கோடி வரி ஏய்ப்பு செய்தது உண்மை தான்.. விளக்கும் வருமான வரித்துறை!

விஜய் மக்கள் இயக்கம் 50 இடங்களில் வெற்றி, 70 இடங்களில் வெற்றி என விதவிதமான செய்தி வெளியிடும் ஊடகங்கள் அந்த இயக்கத்தின் தலைவர் புஸ்ஸி ஆனந்த் வெளியிடும் தகவல்களை அப்படியே சொல்கின்றன. உண்மையில் கட்சி சின்னங்கள் இல்லாத சிற்றூராட்சி உறுப்பினர், சிற்றூராட்சி தலைவர், பதவிகளுக்கு போட்டியிடுபவர்கள் கட்சி வேட்பாளர்கள் இல்லை. ஆனால் பெரும்பாலும் ஏதேனும் கட்சியின் ஆதரவு பெற்றவராக இருப்பார். குருடாம்பாளையம் ஒத்த ஓட்டு அப்படி கேஸ் தான். ஆனால் அதிகாரப்பூர்வமாக அனைவரும் சுயேட்சைகளே..

ஆனால்ஊராட்சி ஒன்றியக்குழு மாவட்ட ஊராட்சி குழு ஆகியவற்றில் கட்சி சின்னம் உண்டு. இவற்றில் தேர்தல் ஆணையத்தினால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் அவரவர்க்கு ஒதுக்கப்பட்ட சின்னங்களிலும், பதிவு செய்த கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் கோரிப் பெற்ற பொது சின்னத்திலோ அல்லது சுயேட்சை சின்னத்திலோ போட்டியிடலாம். (நாம் தமிழர், ம. நீ.ம, அ. ம. மு.க. போல.. ) இவற்றில் அமைப்பு வலிமை இல்லாத கட்சிகள் அல்லது சுயேட்சைகள் வெற்றி பெறுவது அரிது. சிற்றூராட்சி தலைவர் கூட கட்சி ஆதரவு பெற்றவரே வெற்றி பெறுவார்.

ஆனால் விஜய் மக்கள் இயக்கம் அங்கீகாரம் பெற்ற (அ) பதிவு பெற்ற அரசியல் கட்சி அல்ல. அப்படியிருக்க விஜய் மக்கள் இயக்கம் வெற்றி பெற்ற பதவிகள் பற்றி வரும் செய்திகள் அவர்கள் உரிமை கோரிக்கொள்பவை. அதிகாரப்பூர்வமானவை அல்ல. பெரிதும் இவர்கள் சிற்றூராட்சி உறுப்பினர்களாக இருப்பர். 23,221பதவியிடங்களில் 100 இருந்தாலும் அது பெரிய எண்ணிக்கை அல்ல.

பா. ஜ. க, நாம் தமிழர் , போன்றவற்றின் தோல்வியை கொண்டாடுவது வேறு. அது முற்றிலும் மகிழத்தக்கதே. ஆனால் இதுபோன்ற உறுதிப்பாடு இல்லாத உரிமை கோரல்களை ஒப்பிடுவது அபத்தம். அதை ஊடகங்கள் சரிபார்க்காமல் செய்தியாக்குவது கேலிக்கூத்து..

- இரா.முருகானந்தம்

From around the web