சீமான் முன்னிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் பற்றி அவதூறு பேச்சு! கைது நடவடிக்கையா ?

 
durai ntk

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாகப் பேசியதற்காக நாம் தமிழர் கட்சியைச் சார்ந்த யூடியூபர் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கன்னியாகுமரியில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் சாட்டை துரைமுருகன் பங்கேற்றுப் பேசினார். கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து மலைகளை உடைத்து கேரளாவில் துறைமுகம் கட்டுவதற்காக  அனுப்பப்படுவதை கண்டித்துப் பேசினார். அப்போது கேரள முதலமைச்சருடன் தமிழ்நாடு முதலமைச்சரை ஒப்பிட்டுப் பேசியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவதூறாகப் பேசியுள்ளார்.


சமீபத்தில் தான் போலீசார் துரைமுருகனை வேறு ஒரு விவகாரத்தில் கைது செய்திருந்தனர். நாம் தமிழர் கட்சியில் மீண்டும் சேர்ந்து கொண்ட உடனேயே முதலமைச்சர் பற்றி அவதூறாகப் பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

From around the web