அன்புத்தம்பி விஜய்! அஞ்சுவதும் அடிபணிவதும் தமிழர் பரம்பரைக்கே கிடையாது! துணிந்து நில்! விஜய்க்கு சீமான் ஆதரவு

 
Vijay-Seeman

வெளிநாட்டு சொகுசு கார் விவகாரத்தில் நீதிமன்றம் நடிகர் விஜய்க்கு அபராதம் விதித்துள்ள நிலையில் அவருக்கு ஆதரவாக சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கடந்த 2012-ம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் ரக காரை நடிகர் விஜய் இறக்குமதி செய்துள்ளார். இந்த காருக்கு நுழைவு வரி செலுத்த வணிக வரி துறை உதவி ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.

நடிகர் விஜய் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய் காருக்கு நுழைவு வரியில் இருந்து விலக்கு அளிக்க கோரி தொடர்ந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்து ரூ.1 லட்சம் அபராதமும் விதித்துள்ளது. நடிகர்கள் நிஜத்திலும் ஹீரோவாக நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுரையும் வழங்கியது.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நடிகர் விஜய்க்கு ஆதரவாக ட்விட்டரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “அன்புத்தம்பி விஜய்! அஞ்சுவதும் அடிபணிவதும் தமிழர் பரம்பரைக்கே கிடையாது! துணிந்து நில்! இது அவதூறுதானே ஒழிய, குற்றம் இல்லை! தொடர்ந்து செல்! ஏறு ஏறு ஏறு நெஞ்சில் வலிமைகொண்டு ஏறு” என்று உன் படத்தில் வரும் பாடல் வரிகள் போல மிகுந்த உளஉறுதியோடு முன்னேறி வா தம்பி!

விஜய் தொடர்ந்து முறையாக வரிசெலுத்தி வரும் நிலையிலும் அரசியல் காரணங்களுக்காக அவரை அச்சுறுத்த கடந்தாண்டு உள்நோக்கத்தோடு அவர் வீட்டில் வருமானவரி சோதனை நடத்தப்பட்டது.

பொதுவாக அரசாங்கத்தை ஏமாற்ற நினைக்கும் எவரும் நீதிமன்றத்தை நாட நினைக்க மாட்டார்கள், அந்த உண்மையை கூட உணராமல் தம்பி விஜயை குற்றவாளி போல சித்தரித்து அவர் மீது அவதூறுகளை வீசுவது நியாமில்லை” என குறிப்பிட்டுள்ளார்.


 

From around the web