தமிழ்நாட்டில் ஜூலை 12-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு!!

 
Lockdown

தமிழ்நாட்டில் ஜூலை 12-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தற்போது அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற 5-ந் தேதியுடன் முடிகிறது. தற்போது நோய்த்தொற்றின் தீவிரத் தன்மையை பொறுத்து மாவட்டங்கள் 3 வகைகளாக பிரிக்கப்பட்டு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.

முதல் வகையில் கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களும், 2-ம் வகையில் அரியலூர், கடலூர், தர்மபுரி உள்ளிட்ட 23 மாவட்டங்களும், 3-ம் வகையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களும் வருகின்றன.

இந்நிலையில், ஜூலை 12-ம் தேதி காலை 6 மணி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, 5-ம் தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் ஒரே வகையான தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • அனைத்து மாவட்டங்களிலும் பஸ் போக்குவரத்திற்கு அனுமதி
  • மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க இ-பாஸ், இ-பதிவு முறை தேவையில்லை.
  • இரவு 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள கடைகள் இனி 8 மணி வரை இயங்கலாம்.
  • உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 8 மணிவரை 50% பேர் மட்டுமே அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
  • தேநீர் கடைகளில் நிலையான வழிகாட்டு முறைகளை பின்பற்றி 50% வாடிக்கையாளர்களுக்கு அனுமதி.
  • பள்ளிகள், கல்லூரிகள், உயிரியல் பூங்காக்கள், பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்படுகிறது.
  • திரையரங்குகள், மதுக்கூடங்கள், நீச்சல், குளங்கள், அரசியல் கூட்டங்களுகு தடை நீடிக்கிறது.

From around the web