பேருந்தில் கூட்டம் கூட்டமாக பயணம்; விழுப்புரத்தில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பரவும் அபாயம்

 
Villupuram

பேருந்துகளில் கூட்டமாக பயணம் செய்வதால் மாணவர்களுக்கு கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்ததைத்தொடர்ந்து கடந்த 1-ந் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்கள் வரை தினமும் 50 சதவீதம் என சுழற்சி முறையில் பள்ளிக்கு வர வழைக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்படுகின்றன. பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு மூலமாக இலவச பஸ் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம் நான்குமுனை சந்திப்பில் இருந்து பிடாகம், பேரங்கியூர், அரசூர், திருவெண்ணைநல்லூர் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்வதற்கு பேருந்தில் பயணம் செய்து வருகின்றனர்.

ஆனால் இப்பகுதியில் போதிய பேருந்து வசதிகள் இல்லாத காரணத்தால் மாணவர்கள் பலரும் கூட்டமாக ஒரே பேருந்தில் பயணம் செய்யக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. இதிலும் மாணவர்கள் படியில் தொங்கியபடி பயணம் செய்கின்றனர்.

மாணவ, மாணவிகள் மத்தியில் கொரோனா பாதிப்பு ஏற்படும் சூழலில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் கூட்டம் கூட்டமாக பயணம் செய்வதால் மாணவர்களுக்கு கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என மாணவர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

From around the web