தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிகள் 2 நாட்களில் தீர்ந்துவிடும் - அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல்

 
MaSubramanian

தமிழகத்தில் கையிருப்பில் உள்ள தடுப்பூசிகள் 2 நாட்களுக்குத் தான் போதுமானது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கொரோனா மையங்கள் மற்றும் தடுப்புப்பணிகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டுவரும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று சென்னை நந்தம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது  பேசிய அவர்,

தமிழகத்தின் கையிருப்பில் உள்ள 5 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் 2 நாட்களில் காலியாகிவிடும். 25 லட்சம் தடுப்பூசிகள் தரவேண்டிய நிலையில் 13 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன. மத்திய அரசு இன்னும் 12 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை தரவேண்டியுள்ளது.

தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசிகளான கோவிஷீல்டு, கோவாக்சின் காலியாகிவிட்டது. தற்போது கையிருப்பு இல்லை என்றும், நாளை வரலாம் என எதிர்பார்க்கப்படுவதாகவும் மையங்களில் அறிவிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

மேலும், இறப்பு எண்ணிக்கையை குறைத்துக்காட்டுவதாக கூறப்படும் புகார்கள் குறித்து கேள்வி எழுப்பியபோது, இறப்பு எண்ணிக்கையை குறைக்கவேண்டிய அவசியம் தமிழகத்திற்கு இல்லை என்று பதிலளித்தார்.

From around the web