தனியார் பள்ளி மாணவருக்கு கொரோனா..! ஒரு வாரத்துக்கு பள்ளி மூடல்

 
School

சென்னையில் தனியார் பள்ளி மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்ததைத்தொடர்ந்து கடந்த 1-ந் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்கள் வரை தினமும் 50 சதவீதம் என சுழற்சி முறையில் பள்ளிக்கு வர வழைக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்படுகின்றன.

பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மாணவ-மாணவிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்படத்தொடங்கி உள்ளது.

இந்நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் பள்ளி மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதிசெய்யப்பட்ட மாணவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். கொரோனா பரவியதை தொடர்ந்து அந்தப்பள்ளி பள்ளி ஒருவாரம் மூடப்பட்டது. மேலும் மாநகராட்சி சார்பில் நோய் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

From around the web