பெரம்பலூரில் 7 மாணவிகளுக்கு கொரோனா; தனியார் பள்ளி மூடல்

 
Corona world

பெரம்பலூரில் மாணவிகள் 7 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், தனியார் பள்ளி மூடப்பட்டது.

தமிழ்நாட்டில் கடந்த 1-ந் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட்டு வருகின்றன.

பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே வகுப்புகள் நடந்து வருகின்றன. மற்ற வகுப்புகளுக்கு வரும் நவம்பர் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஒரு சில பள்ளிகளில் மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், மாணவிகள் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து அந்த பள்ளி வளாகம் மூடப்பட்டு, வரும் அக்டோபர் 3-ம் தேதி வரை பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அந்த மாணவிகளுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

From around the web