தமிழக அரசுக்கும், அதிகாரிகளுக்கும் பாராட்டுகள் - ராமதாஸ் ட்வீட்

 
Ramadoss

தமிழகத்தில் கொரோனா குறைந்து வருவதற்கு தமிழக அரசுக்கும், அதிகாரிகளுக்கும் பாராட்டுகள் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா 2-ம் அலை காரணமாக தொற்று அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு முழு ஊரடங்கை அமுல்படுத்தியுள்ளது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது.

இந்நிலையில், சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கொரோனா குறைந்து வருவதற்கு தமிழக அரசு எடுத்த நடவடிக்கையே காரணம் என்றும் அதற்காக தமிழக அரசுக்கும், அதிகாரிகளுக்கும்  பாராட்டுகள் என்றும் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “இந்தியாவில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. மராட்டியத்தில் தொடங்கி கர்நாடகம், கேரளம், தமிழ்நாடு, ஆந்திரா, ஒதிஷா, மேற்குவங்கம் ஆகிய கடலோர மாநிலங்களைத் தவிர மற்ற மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவல் குறிப்பிடும்படியாக இல்லை!

பெங்களூருடன் ஒப்பிடும் போது  சென்னையில் கொரோனா விரைவாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறது. இதற்கு ஊரடங்கும் ஒரு காரணம். இதை சாத்தியமாக்கிய அரசுக்கும், அதிகாரிகளுக்கும் பாராட்டுகள்.  தொடர்ந்து விழிப்பாக பணியாற்ற வேண்டியதும் அவசியமாகும்!” என்று குறிப்பிட்டுள்ளார்.


 

From around the web