மாநகர பேருந்துக்கள் நாளை முதல் 50 சதவீத இருக்கைகளுடன் இயங்கும்- போக்குவரத்து கழகம் அறிவிப்பு

 
MTC

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக மாநகர பஸ்கள் நாளை முதல் 50 சதவீத இருக்கைகளுடன் இயங்கும் என போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

சென்னையில் நாளை முதல் மாநகரப் பேருந்துகள் 50 சதவீத பயணிகளுடன் மட்டுமே இயக்கப்படும் என மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று அதிகரிப்பால் தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்தக் கட்டுப்பாடுகள் நாளை முதல் அமலுக்கு வர உள்ளன.

புதிய கட்டுப்பாட்டில், பேருந்துகளில் 50 சதவீத இருக்கைகளுடன் இயக்கம், பிற்பகல் 12 மணிவரை மட்டுமே மளிகை, தேனீர் கடைகள் செயல்படும்  என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில்,  இன்று சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட அறிக்கையில், “நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் நிலையில் சென்னையில் மாநகரப் பேருந்துகள் 50 சதவீத பயணிகளுடன் மட்டுமே இயக்கப்படும்.

பயணிகள் உரிய முகக்கவசம் அணிந்து, தனிநபர் இடைவெளியினைப் பின்பற்றி பாதுகாப்பான முறையில் பயணம் செய்யுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web