நாளை மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச்செயலாளர்  இறையன்பு ஆலோசனை

 
Iraianbu

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து நாளை மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச்செயலாளர் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதால், படிப்படியாக தளர்வுகளை அமல்படுத்தி ஊரடங்கு உத்தரவை வாராவாரம் அரசு நீட்டித்து வருகிறது. அந்த வகையில் 19-ந் தேதி காலை 6 மணியோடு தற்போதைய ஊரடங்கு உத்தரவு நிறைவடைகிறது.

இந்த நிலையில் ஜூலை 31-ம் தேதி காலை 6 மணி வரை மேலும் தளர்வுகளுடன் ஊரடங்கு பிறப்பித்து தமிழ்நாடு அரசு நேற்று அறிவித்தது.

இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன், நாளை தலைமை செயலாளர் இறையன்பு காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

From around the web