தாயாக, தந்தையாக மாறிய முதலமைச்சர்! உணர்ச்சிவசப்படும் கோவை மருத்துவமனை டீன்!!

 
Dr M Ravindran

முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்காக கோயமுத்தூர் சென்ற போது யாரும் எதிர்பாராத வகையில் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் ஐசியூ பிரிவில் இருந்த கொரோனா நோயாளிகளை சந்தித்து ஆறுதல் தெரிவித்து நம்பிக்கையூட்டினார். மருத்துவர்கள், செவிலியர்களிடம் பேசி அரசு அவர்களுடன் இருக்கிறது என்று உறுதியளித்தார். இந்த நிகழ்வு குறித்து இ.எஸ்.ஐ. மருத்துவமனை டீன் டாக்டர். ரவீந்திரன் மிகவும் நெகிழ்ந்து போயுள்ளார்.

தனியார் தொலைக்காடசி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய டாக்டர்.ரவீந்திரன் இ.எஸ்.ஐ மருத்துவமனை பக்கம் எப்போதாவது தான் எம்.எல்.ஏ போன்ற பிரபலங்கள் வருவது உண்டு. இங்கே வந்தால் நோய்த்தொற்று வந்து விடும் என்று எங்களிடமிருந்தே மக்கள் விலகிச்செல்வார்கள். இந்த மருத்துவமனைக்கு முதலமைச்சர் வருகிறார் என்றதும் மருத்துவர்களைப் பார்த்து விட்டுச் செல்வார் என்று தான் நினைத்தோம். கொரோனா டெஸ்ட் எடுக்குமிடம், சி.டி.ஸ்கேன் ஆகிய இடங்களைப் பார்த்துவிட்டு கொரோனா நோயாளிகளைப் பார்க்க வேண்டும் என்றார்.

வேண்டாம், அது நோய்தொற்றுக்கு அதிகமாக வாய்ப்புள்ள இடம் என்று சொன்னேன். “பார்க்கலாம்” என்று சொல்லி என்னை மேலே எதுவும் சொல்லவிடவில்லை. முதலமைச்சர் சொன்னால் எனக்கு வேறு என்ன வழி, பி.பி.இ கிட் அணிந்து கொரோனா சாதாரண வார்டுக்குத்தான் வருவார் என்று நினைத்தேன். ஐ.சி.யூ பார்க்கலாம் என்றார். அங்கே நோயாளிகளைப் பார்த்தவர், சிகிச்சை எப்படி இருக்கிறது, உணவு நன்றாக இருக்கிறதா? நன்றாகப் பார்த்துக் கொள்கிறார்களா? என்று ஒரு தாயைப் போல் அக்கறையுட்ன கேட்டார். 

மருத்துவர்கள் தங்கள் பணி பற்றி பேசிய போது, “உங்க அப்பா மாதிரி, எல்லாத்தையும் பார்த்துக் கொள்வோம்” என்று தந்தையாக மாறிவிட்டார். கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் மருத்துவரைப் பார்த்து, நன்றாக கவனித்துக் கொள்கிறார்களா என்று கேட்டறிந்தார். என்னையும் ஒரு நோயாளி போல நன்றாகக் கவனித்துக் கொள்கிறார், அவர் என்னுடைய பேராசிரியர் என்று என்னை அடையாளம் காட்டினார் அந்த மருத்துவர்.

குப்புற படுக்கப்போட்டு நாங்கள் செய்யும் சிகிச்சைப் பற்றி எடுத்துச் சொன்னேன். பி.பி.இ கிட் உடையில் அது அவருக்கு கேட்டிருக்குமா? அல்லது புரிந்து இருக்குமா என்று நினைத்தேன். மாவட்ட ஆட்சித்தலைவர் அடுத்த ஆய்வுக் கூட்டத்தில் இந்த சிகிச்சை முறை பற்றி அப்படியே பேசுகிறார். முதலமைச்சரின் இந்த ஈடுபாட்டைக் கண்டு வியந்து உணர்ச்சி வசப்ப்ட்டுள்ளார் மருத்துவர் ரவீந்திரன்

From around the web