தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

 
Vijayakant-Stalin

முதல்வர் மு.க.ஸ்டாலின் தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது வீட்டில் சந்தித்து நலம் விசாரித்தார்.

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சென்றார்.  விஜயகாந்தை நேரில் சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார்.

மேலும் கொரோனா பேரிடர் நிவாரண நிதியாக 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதல்வரிடம் விஜயகாந்த வழங்கினார்.

இந்த சந்திப்பின் போது மு.க.ஸ்டாலினுடன் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்,நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா உள்ளிட்டோரும் உடன் சென்றனர். விஜயகாந்த்  வீட்டிற்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினை எல்.கே.சுதீஷ் வரவேற்று அழைத்து சென்றார்.

மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக விஜயகாந்தை சந்தித்துள்ளார்.

From around the web