மகாத்மா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு முதலல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை

 
Cm-stalin-tributes-gandhi

தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் 153-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது திருவருவப் படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மகாத்மா காந்தியின் 153-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் சென்னை மெரினாவில் உள்ள காந்தி சிலையின் கீழே திருவுருவப் படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. விடுதலைப் போராட்ட காலத்தில் கதர் ஆடை அணிய வலியுறுத்தி காந்தியடிகள் தறி நெய்ததன் அடையாளமாக தறியால் நெய்யப்பட்ட கதர் நூல் மாலை அணிவிக்கப்பட்டிருந்தது. காந்தியடிகளின் திருவுருவப்படத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

CmStalin-tributes-gandhi

சென்னை சர்வோதயா சங்கம் சார்பில் காந்தியடிகள் குறித்து பாடப்பட்ட பாடல்களை, ஆளுநரும் முதல்வரும் கேட்டு மகிழ்ந்தனர். பாடல்கள் பாடிய மூதாட்டி சுப்புலட்சுமி, 1961-ம் ஆண்டு முதல் காந்தி ஜெயந்தியன்று பாடல் இசைத்து வருவதாக கூறிய நிலையில் அவருக்கு முதல்வரும், ஆளுநரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

From around the web