கோவையில் வ.உ.சி முழு உருவ சிலை அமைக்கப்படும் - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

 
CM-Stalin

கோவை வ.உ.சி பூங்காவில் அவருக்கு முழு உருவ சிலை அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் இன்றைய கூட்டம் காலை 10 மணிக்கு கேள்வி நேரத்துடன் தொடங்கியது. இதில் வ.உ.சி 150-வது பிறந்த நாளையொட்டி புதிய அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

அதில், கோவை மாவட்டத்தில் உள்ள வ.உ.சி பூங்காவில் வ.உ.சிதம்பரனார்  முழு உருவ சிலை அமைக்கப்படும். கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி விருது வழங்கப்படும்.

வ.உ.சி நினைவு நாளான நவம்பர் 18-ந் தேதி தியாக திருநாளாக கொண்டாடப்படும். வ.உ.சி எழுதிய புத்தகங்கள் புதுப்பிக்கப்பட்டு குறைந்த விலையில் மக்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். வ.உ.சிதம்பரனார் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் திரைப்படம் நவீன டிஜிட்டல் முறையில் வெளியிடப்படும்.

தூத்துக்குடியில் உள்ள பெரிய காட்டன் சாலை வ.உ.சி சாலை என பெயர் மாற்றப்படும். கப்பல் தொடர்பான துறைகளில் சிறந்த பங்காற்றி வரும் தமிழருக்கு ஆண்டுதோறும் வ.உ.சி பெயரில் விருதுகள் வழங்கப்படும்.

நெல்லை,தூத்துக்குடி மாவட்டங்களில் ஓராண்டுக்கு கட்டப்படும் அரசு கட்டடங்களுக்கு வ.உ.சி பெயர் வைக்கப்படும். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் வ.உ.சி பெயரில் புதிய ஆய்வறிக்கை வெளியிடப்படும் என்ற அறிவுப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

From around the web