மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

 
Handicapped-for-vehicle

மாற்றுத்திறனாளிகளின் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணை மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் பணி நியமன ஆணைகளை வழங்கும் நிகழ்வு தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வின்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அதன்படி 1,228 மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கும் அடையாளமாக 5 நபர்களுக்கு இன்று ஸ்கூட்டர் வழங்கப்பட்டது.

இதே போல் 9,173 பேருக்கு பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் விதமாக 5 பேருக்கு மாதம் ரூ.1,600 உதவித்தொகையை முதல்வர் வழங்கினார்.

மேலும் பணிக்காலத்தில் உயிரிழந்த 4 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு, கருணையின் அடிப்படையில் பணி நியமன ஆணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.

From around the web