தேனாம்பேட்டையில் மரபணு பகுப்பாய்வு மையத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

 
CM-Stalin-innagurates-Mutant-lab

தமிழ்நாட்டில் முதல் முறையாக தேனாம்பேட்டையில் மரபணு பகுப்பாய்வு கூடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

உருமாறிய கொரோனோ தொற்றை கண்டறியும் ஆய்வகங்கள், வெளி மாநிலங்களில் பெங்களூரு, புனேவில் உள்ளிட்ட நகரங்களில் மட்டுமே உள்ளன. தமிழகத்திலிருந்து அனுப்பப்படும் மாதிரிகளை சோதனை செய்து முடிவுகள் பெறுவதில் காலதாமதமும், அதிக செலவும் ஏற்படுகிறது.

இந்த நிலையில், சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ்., வளாகத்தில், 4 கோடி ரூபாய் செலவில், வைரஸ் மரபணு பகுப்பாய்வுக் கூடம் அமைக்கப்பட்டும் என நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சட்டப்பேரவையில் தெரிவித்தார். இதையடுத்து, மரபணு பகுப்பாய்வு கூடம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், பணிகள் நிறைவடைந்த நிலையில் தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் கொரோனா வைரஸ் மரபணு பகுப்பாய்வு கூடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

மரபணு பகுப்பாய்வு கூடத்தில் பணிபுரிய கருணை அடிப்படையில் 91 பேருக்கு பணி நியமன ஆணையும் முதல்வர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் போது மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடன் இருந்தார்.

இந்தியாவிலேயே மாநில அரசால் அமைக்கப்பட்ட முதல் மரபணு பகுப்பாய்வு மையம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web