மழையால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு..!

 
CM-Stalin-visit-cuddalore

மழையால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து வருகிறார்.

கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னையில் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் 6-வது நாளாக நேற்று காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டார்.

இந்த நிலையில் கனமழையால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு நடத்தி வருகிறார். இதனையடுத்து இன்று (நவ 13) காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் புதுச்சேரியில் இருந்து புறப்பட்டு டெல்டா மாவட்டங்களான கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் கனமழையினால் பாதிக்கப்பட்ட பயிர் சேதங்களை பார்வையிடச் செல்கிறார்.

இதன்படி கடலூர் மாவட்டம் அரங்கமங்கலம், அடூர் அகரம் பகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். மேலும் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் மற்றும் குறிஞ்சிப்பாடி பகுதியில் பருவ மழையால் பாதிக்கப்பட்ட 31 குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இதனைத்தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டம் இருக்கூர், தரங்கம்பாடி பகுதிகளில் பார்வையிடுகிறார். அதன்பிறகு, நாகப்பட்டினம் மாவட்டம் கருங்கனி, அருந்தவபுலம் பகுதிகளிலும், திருவாரூர் மாவட்டம் ராயநல்லூர், புழுதிக்குடி பகுதிகளிலும், மாலை தஞ்சாவூர் மாவட்டம் பெரியக்கோட்டை பகுதியிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.

From around the web