மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை 5வது நாளாக ஆய்வு செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

 
CM-Stalin-visit-floods-area

சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 5-வது நாளாக இன்று ஆய்வு செய்தார்.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இது சென்னைக்கு அருகே இன்று மாலை கரையை கடக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில், சென்னையில் நேற்று மாலை 3 மணிக்கு தொடங்கிய மழை இரவு முழுவதும் விடிய, விடிய கொட்டித் தீர்த்தது.

மேலும் தற்போது வரை சென்னையின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னையின் முக்கிய சாலைகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும் மழைநீர் தேங்கியுள்ளது. சென்னை மட்டுமின்றி புறநகர் பகுதிகளிலும் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. பல்வேறு இடங்களில் தண்ணீர் வடியாததால் பலர் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.

இந்நிலையில், சென்னையில் மழை, வெள்ள பாதிப்புகள் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் 5-வது நாளாக இன்று நேரில் ஆய்வு செய்தார்.

அப்போது சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள உணவு தயாரிக்கும் இடத்திற்கு நேரில் சென்ற முதல்வர் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக தயாரிக்கப்பட்ட உணவை ருசி பார்த்தார் தரத்தினை ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது அமைச்சர்கள் சேகர்பாபு, கே.என்.நேரு, எ.வ. வேலு, மாநகராட்சி ஆணையர் ககந்தீப் சிங்பேடி ஆகியோர் உடன் இருந்தனர்.

From around the web