தமிழ்நாட்டில் பஞ்சுக்கான 1% நுழைவு வரி ரத்து - முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு

 
TN-Assembly

பஞ்சு மீதான நுழைவு வரி 1 சதவீதம் ரத்து சட்டத் திருத்தம் நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரிலே அறிமுகப்படுத்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று கூடியதும் விதி எண் 110-ன் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில்,

தொழில் முனைவோர் மற்றும் நெசவாளர்களின் கோரிக்கையை ஏற்று பஞ்சு மீதான நுழைவு வரி 1 சதவீதம்  ரத்து செய்யப்படுகிறது. நெசவு தொழிலை நம்பியிருக்கும் தொழிலாளர்களைக் கருத்தில் கொண்டு நுழைவு வரி ரத்து செய்யப்படுகிறது என கூறினார்.

மேலும், பஞ்சு மீதான நுழைவு வரி 1 சதவீதம் ரத்து சட்டத் திருத்தம் நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரிலே அறிமுகப்படுத்தப்படும் என கூறினார்.

From around the web