கோவை அரசு விழாவில் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசனை மேடைக்கு அழைத்த முதல்வர்..! குவியும் பாராட்டு!!

 
CM-Stalin-invites-vanathi-to-stage

கோவையில் விருந்தினர் வரிசையில் அமர்ந்திருந்த பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசனை முதல்வர் மு.க.ஸ்டாலின் மேடையில் அமர அழைத்த வீடியோ வைரலாகி வருகிறது.

கோவை மற்றும் திருப்பூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி, இன்று கோவை வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

இந்த நிகழ்ச்சியை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் புறக்கணித்தனர். கோவை தெற்கு தொகுதியில் வெற்றி பெற்ற பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன் மட்டும் பங்கேற்றார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அமைச்சர்கள், திமுக எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர். அப்போது, விழா மேடையில் அமைச்சர்கள் அனைவரும் அமர்ந்திருந்தனர். கீழே விருந்தினர்கள் வரிசையில் பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் அமர்ந்திருந்தார்.

அவரை விழா மேடையில் அமைச்சர் செந்தில்பாலாஜி பேசிக் கொண்டிருந்தபோது, கீழே வரிசையில் அமர்ந்திருந்த வானதி சீனிவாசனை முதல்வர் மு.க.ஸ்டாலின் மேடையில் வந்து அமருமாறு அழைத்தார்.

வானதி சீனிவாசனும் அவரது அழைப்பை ஏற்று விழாமேடைக்கு வந்து, அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தார். முதல்வரின் வானதியை மேடைக்கு அழைத்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், முதல்வரின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.


 

From around the web