கலைஞர் ஓய்வகத்தில் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின்!

 
கலைஞர் ஓய்வகத்தில் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின்!

சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் 51 ஆயிரத்து 399 வாக்குகள் பெற்று திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றுள்ளார். எதிராகப் போட்டியிட்ட பாமக வேட்பாளர் ஏ.வி.ஏ. கஸாலியை விட  36 ஆயிரம் வாக்குகள் கூடுதல் வாக்குகள் பெற்று உதயநிதி வெற்றி பெற்றுள்ளார்.

சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றதற்கான சான்றிதழை சென்னை ராணிமேரிக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் அதிகாரிகளிடம் பெற்றுக் கொண்டார் உதயநிதி ஸ்டாலின். சான்றிதழைப் பெற்றுக் கொண்ட உதயநிதி ஸ்டாலின். நேராக  உள்ள கலைஞர் கருணாநிதி ஓய்வகத்திற்குச் சென்றார். அங்கு அவருடைய காலடியில் தன்னுடைய சட்டமன்ற உறுப்பினர் சான்றிதழை வைத்து, தாத்தாவிடம் வாழ்த்து பெற்றுக் கொண்டார்.

பின்னர் செய்தியாளர்கள் அவரை சூழ்ந்து கொண்டு கேள்விகள் எழுப்பினார்கள். நாளை தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்கள் சந்திப்பில் உங்கள் அனைவரிடமும் பேசுவார். அதற்கு முன்னர் நான் பேச மாட்டேன் என்று கூறிவிட்டுச் சென்றார் உதயநிதி ஸ்டாலின்.

தாத்தா மூன்று முறை தொடர்ந்து வெற்றி பெற்ற சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட விரும்புகிறேன் என்று முன்னதாக திமுக வேட்பாளர் நேர்காணலின் போது கூறியிருந்தார்.தற்போது தாத்தாவின் தொகுதியை தக்க வைத்துக் கொண்டு முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினராகி உள்ளார் உதயநிதி ஸ்டாலின். அமைச்சர் ஆவாரா என்பது விரைவில் தெரிய வரும்.

From around the web