தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்

 
Weather

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக அடுத்த நான்கு நாட்களுக்குத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்கள், வட மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக் கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது.

செவ்வாயன்று மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் கன மழையும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும். ஜூன் 2, 3, 4 ஆகிய நாட்களில் வட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குமரிக்கடலில் பலத்த காற்று வீசும் என்பதால் அப்பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளது.

From around the web