மழை வெள்ளத்தில் தத்தளிக்கும் சென்னை: 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்!

 
CM-Stalin-visits-flood-area

வடசென்னை துறைமுகம் தொகுதிக்குட்பட்ட கல்யாணபுரம் பகுதியில் மழை பாதித்த இடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பொழிந்து வரும் நிலையில், பல்வேறு இடங்களில் உள்ள சாலைகளில் நீர் தேங்கி உள்ளது.

பல இடங்களில் வீட்டிற்குள் வெள்ளநீர் புகுந்துள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை மாநகரமே வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. சாலைகளில்  வெள்ளம் ஓடுவதால் வாகனங்கள்  நீரில் ஊர்ந்து செல்கின்றன.

CM-Stalin-distribute-food

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுர் மாவட்டங்கள் இன்று நாளையும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் தொடர் மழை காரணமாக, கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, நாமக்கல், புதுக்கோட்டை,அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், மாவட்டங்களில் பள்ளிகளுக்கும், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், தஞ்சை, திருவண்ணாமலை மாவட்டங்களில் அனைத்து பள்ளி, கல்லூரிகளூக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல் ப்குதியில் இயங்கும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னையில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை 2-வது நாளாக இன்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து வருகிறார்.

CM-Stalin-distribute-food

முதற்கட்டமாக சென்னை துறைமுகம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கல்யாணபுரத்தில் மழையால் பாதிப்பு பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். மேலும் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி, பால், போர்வை உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

இதையடுத்து மழை பாதிப்பு நிலவரம் குறித்து மாநகராட்சி அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

From around the web