கொரோனா விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்கப்படும் - சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

 
கொரோனா விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்கப்படும் - சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாவிட்டால் வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க நேரிடும் என தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கரூரில் வாக்கு எண்ணிக்கையின் போது கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றக்கோரி எம்.ஆர். விஜய பாஸ்கர் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

இந்த வழக்கு விசாரணையின் போது சென்னை உயர்நீதிமன்றம் கூறியதாவது, “கொரோனா  2-வது அலை தீவிரம் அடைய தேர்தல் ஆணையம் ஒரு காரணம்.  கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புக்கு தேர்தல் ஆணையத்தின் மீது கொலைக் குற்றம் சுமத்தினாலும் தவறில்லை.

அரசியல் கட்சிகளுக்கு இஷ்டம் போல பிரசாரம் செய்ததே கொரோனா பரவலுக்கு காரணம். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முறையாக இல்லையென்றால் வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க நேரிடும். சுகாதார செயலாளர், இயக்குநரிடம் உரிய ஆலோசனை பெற்று நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளது.

From around the web