மதம் மாறியவருக்கு கலப்பு திருமண சான்று கிடையாது - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

 
High-Court

மதம் மாறியவர்களுக்கு கலப்பு திருமண சான்று தர உத்தரவிட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் மதம் மாறியவர்களுக்கு கலப்பு திருமண சான்று வழங்குமாறு உத்தரவிட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும்,மதம் மாறியவர்களுக்கு கலப்பு திருமண சான்று வழங்கினால், கலப்பு திருமணம் செய்தவர்களுக்கான சலுகைகள் தவறாக பயன்படுத்தப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்தவ ஆதிதிராவிட வகுப்பை சேர்ந்த பால்ராஜ் என்பவர்,அருந்ததியர் இனத்தை சேர்ந்த அமுதா என்பவரை திருமணம் செய்த நிலையில், கலப்பு மண சான்று கேட்டு விண்ணப்பித்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில்,சென்னை உயர்நீதிமன்றம் கலப்பு திருமண சான்று தர உத்தரவிட முடியாது என்று மறுப்பு தெரிவித்துள்ளது.

From around the web