சென்னை உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதி இடமாற்றம்; குடியரசுத் தலைவர் ஒப்புதல்

 
Sanjib-Banerjee

தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜியை இடமாற்றம் செய்யும், கொலிஜியத்தின் பரிந்துரைக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக கடந்த ஜனவரி முதல் பதவி வகித்து வருபவர் சஞ்ஜிப் பானர்ஜி. கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாகப் பணியாற்றி வந்த இவர், சென்னை உயர்நீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்த சூழலில், சஞ்ஜிப் பானர்ஜியை, மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்ய  உச்சநீதிமன்றம் கொலீஜியம் முடிவு செய்து ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்தது. தலைமை நீதிபதியை இடமாற்றம் செய்ய  வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதியிருந்தனர்.

இந்நிலையில், தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜியை இடமாற்றம் செய்யும், கொலிஜியத்தின் பரிந்துரைக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

From around the web