அரசு திட்டமிடாத காரணத்தினால் சென்னையில் வெள்ளம்: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

 
ADMK

மோட்டார்களை வைத்து மழை தண்ணீரை விரைந்து வெளியேற்ற வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பொழிந்து வரும் நிலையில், பல்வேறு இடங்களில் உள்ள சாலைகளில் நீர் தேங்கி உள்ளது.

இந்நிலையில், சென்னையில் மழை வெள்ள பாதிப்புகளை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார். அதன் பின் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர் கூறியதாவது,

“பருவமழை குறித்து முன்கூட்டி திட்டமிட்டிருக்க வேண்டும். அரசின் மெத்தனப்போக்கால் பல ஆயிரம் மக்கள் முகாமில் தஞ்சம் அடைந்தனர். திட்டமிடாத காரணத்தினால் சென்னையில் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.  

மோட்டார்களை வைத்து மழை  தண்ணீரை விரைந்து வெளியேற்ற வேண்டும். பால், மின்சாரம், குடிநீர் இன்றி பொதுமக்கள் தவித்து வருகின்றனர். அதிமுக அரசு ஓவ்வொரு மண்டலத்திற்கும் முன்கூட்டியே அதிகாரிகளை நியமித்திருந்தது. மக்களுக்கு தேவையான உதவிகளை அதிமுக அரசு விரைந்து செய்து கொடுத்தது” என்றார்.

From around the web