டெல்டா மற்றும் தென்கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு..!

 
Rain-Report

டெல்டா மற்றும் தென்கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

டெல்டா மாவட்டங்கள், தென்கடலோர மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று (ஜன.11) லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்ல்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

தென்மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் நாளை (ஜன.12) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை மறுதினம் (ஜன.13) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

கடலோர மாவட்டங்கள் அதனை ஒட்டியுள்ள உள்மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் வரும் 14,15 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியசை ஒட்டியே இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் எங்கும் மழை பதிவாகவில்லை..

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக இன்று (ஜன.11) இடி மழையுடன் கூடிய சூறாவளி காற்றும் மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இப்பகுதிகளுக்கு செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

From around the web