தமிழ்நாட்டில் இந்த 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

 
Rain-Report

மதுரை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நாளை இடி மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்க கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, ஈரோடு, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை மதுரை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடியில்   இடி மின்னலுடன் கூடிய   கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நவம்பர் 25, 26 ஆகிய நாட்களில் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்பரநாடு, மூங்கில்துறைபட்டு பகுதிகளில் தலா 4 செ.மீ. மழையும் மேற்கு தாம்பரம், ஆவடி, எடப்பாடி உள்ளிட்ட பகுதியில் தலா 3 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

From around the web