மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு நினைவு தினம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை

 
MKS

மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு தினத்தையொட்டி பாரதியார் உருவப்படத்திற்கு முதல்வர் மு.க ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

மகாகவி பாரதியாரின் நினைவு நாளான செப்டம்பர் 11-ம் தேதி, இந்த ஆண்டு முதல் மகாகவி நாளாகக் கடைப்பிடிக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், பாரதியாரின் நுற்றாண்டு நினைவு நாளையொட்டி  சென்னை, மெரினாவில் உள்ள பாரதியாரின் சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு முதல்வர் மு.க ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

மு.க.ஸ்டாலினுடன் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, தங்கம் தென்னரசு, ஏ.வ.வேலு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினார்.

From around the web