கூட்டணியில் இருந்து பாமக வெளியேறியதில் வருத்தம் இல்லை - செல்லூர் ராஜு

 
Sellur-raju

கூட்டணியில் இருந்து பாமக வெளியேறியதில் வருத்தம் இல்லை என அதிமுக எம்.எல்.ஏ செல்லூர் ராஜு கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வரும் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதையடுத்து, தேர்தல் பணிகள், கூட்டணி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் அரசியல் கட்சிகள் இறங்கியுள்ளன.

இதற்கிடையில், சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிந்த பாமக நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவோம் என அறிவித்துள்ளது. இதனால், அதிமுக - பாமக கூட்டணியில் விரிசல் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில், கூட்டணியில் இருந்து பாமக வெளியேறியதில் வருத்தம் இல்லை என அதிமுக எம்.எல்.ஏ செல்லூர் ராஜு கருத்து தெரிவித்துள்ளார்.

அதிமுக எம்.எல்.ஏ செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, “கூட்டணி என்பது தோளில் போட்டிருக்கும் துண்டு போல தான், தேவையெனில் போட்டுக் கொள்வோம் இல்லையெனில் கழற்றி வைத்துவிடுவோம். கூட்டணியில் இருந்து பாமக வெளியேறியதில் வருத்தம் இல்லை” என்றார்.

From around the web