தமிழ்நாடு அமைச்சர் துரைமுருகன் மீது சாதிய வன்கொடுமை புகார்

 
Duraimurugan

தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மீது சாதிய வன்கொடுமை புகார் அளிக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டம் சேர்க்காடு பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மீது டெல்லியிலுள்ள தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில், நில அபகரிப்பு, சாதிய வன்கொடுமை தொடர்பாக புகார் அளித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக ஆகஸ்ட் 6-ம் தேதி வேலூர் மாவட்ட ஆட்சியர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்தி 15 நாள்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கவும் ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சுப்பிரமணியின் புகாரில், அமைச்சர் துரைமுருகனின் உறவினர்கள் சிலரது பெயர்களும் இடம் பெற்றுள்ளன.

From around the web