நகரப் பேருந்தில் வடமாநில பெண்களிடம் பஸ் கட்டணம் வசூல்... கையும் களவுமாக சிக்கிய நடத்துனர்!!

 
Salem

சேலத்தில் நகரப் பேருந்தில் வடமாநில பெண்களிடம் பஸ் கட்டணம் வசூலித்த நடத்துனரை பணியிடை நீக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் சாதாரண நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணம் இலவசம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இலவச பயணத்துக்கான பிரத்யேக பயணச்சீட்டும் பேருந்துகளில் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சேலம் ரயில் நிலையத்திலிருந்து பழைய பேருந்து நிலையம் புறப்பட்ட நகரப் பேருந்து ஒன்றில் ஏறிய பீகாரைச் சேர்ந்த 5 பெண்களிடம் நடத்துனர் நவீன்குமார் என்பவர் கட்டணம் வசூலித்துள்ளார்.

பேருந்து 5 ரோடு பகுதியை அடைந்தபோது, அங்கு காத்திருந்த டிக்கெட் பரிசோதனை அதிகாரிகள் பயணச்சீட்டுகளை பரிசோதித்ததில் பீகார் பெண்களிடம் கட்டணம் வசூலித்தது

இதனையடுத்து நவீன்குமாரை பணியிடை நீக்கம் செய்ய போக்குவரத்து உயர் அதிகாரிகள் பரிந்துரை செய்தனர்.

From around the web