பிரட், பால் இது ஒரு வேளைக்கு கூட பத்தாதே... குஷ்புவிடம் பெண் கேட்ட கேள்வி

 
Khushboo

பால் பாக்கெட், பிரட் பாக்கெட்டுக்காக இவ்வளவு நேரம் வெயில்ல நிற்க வைக்குறீங்களே என்று குஷ்புவிடம் பெண்கள் புலம்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த வாரம் முதல் பரவலாக பெய்து வரும் கனமழையால் வட மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு இடங்கள் பாதிப்புக்குள்ளானது. இதையடுத்து பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்கள்.

சென்னை பட்டினம்பாக்கம் கடற்கரை சாலையில் அமைந்துள்ள டுமீல் குப்பம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி 500 பேருக்கு பிரெட் & 500 பால் பாக்கெட் ஆகியவற்றை நடிகையும் பாஜக செயற்குழு உறுப்பினருமான குஷ்பு சுந்தர் இதை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த குஷ்பு, 10 வருடமாக எம்எல்ஏவாக ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் இருந்தார். 10 வருடமாக இருந்தும் ஒரு தொகுதியை உங்களால் பார்க்க முடியவில்லை. எப்படி மொத்த மக்களையும் பார்த்து கொள்ள போகிறார். ஒவ்வொரு தொகுதியிலும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக எதிர்க்கட்சியினர் மற்றும் தன்னார்வலர்கள் தான் வேலை செய்கிறார்கள். திமுகவின் சார்பாக முதல்வர் ஸ்டாலினை தவிர யாரும் வேலை செய்யவில்லை என்றார்.

கனமழைக்கு ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு அதிமுக ஆட்சியில் வடிகால்கள் சரியாக செய்யப்படாததும், அதில் நடத்திய ஊழல் தான் காரணம் என்று முதல்வர் ஸ்டாலின் குற்றம்சாட்டுகிறாரே அதுபற்றி உங்கள் கருத்து என்ன என்று செய்தியாளர்கள் கேட்டனர்.

இதற்கு குஷ்பு பதில் அளிக்கையில், இதுபோன்ற குற்றச்சாட்டுகள் இருந்து கொண்டே தான் இருக்கும். அதிமுக காலத்தில் வெள்ளம் ஏற்பட திமுக தான் காரணமா, திமுக தான் ஒரு காலத்தில் ஊழல் கட்சி என்று பேசப்பட்டது. கொளத்தூர் தொகுதியில் 10 வருடமாக ஸ்டாலின் எம்எல்ஏ, அங்கு மழையால் பாதிப்பு இல்லையா? வெள்ளம் தேங்கவில்லையா? 10 வருடமாக எம்எல்ஏவாக இருந்து சரி செய்ய முடியவில்லை என்றால், இதற்கு முன்பு இருந்த அதிமுகவை குற்றம்சாட்ட உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்று குஷ்பு கூறினார்.

செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் தெரிவித்துக் கொண்டிருக்கும் பொழுது ஒரு உதவி பெற வந்த பெண்மணி 5 கிலோ அரிசி கொடுத்திருந்தால் கூட பிரயோஜனமாக இருந்திருக்கும். தற்போது நீங்கள் கொடுத்திருக்கும் பிரட் மற்றும் பால் ஒரு வேளை கூட பத்தாது என வேதனையாக இருக்கிறது என்றார்.

இதற்கு பதில் அளித்த குஷ்பு உறுதியாக நாங்கள் உதவி செய்கிறோம் . எல்லா கட்சிகளும் செய்ய வேண்டும் என்றார். அதற்கு அந்த பெண்மணி, நீங்கள் முதல் அடி எடுத்து வைத்துள்ளீர்கள் என்றார். அப்போது குஷ்பு, நீங்கள் சொல்வது போல் முதல் அடி எடுத்து வைத்துள்ளோம். நிச்சயம் உ தவுவோம். இந்த தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏ எங்கே? ஒரு பிரட் அல்லது பாலாவது கொடுத்தாரா என்று திமுகவை குஷ்பு விமர்சித்தார்.

From around the web