#BREAKING: 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து - தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

 
Students

தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு  ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா பரவலெ காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில், 12-ம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்துவது குறித்து தமிழ்நாடு அரசு ஆலோசித்து வருகிறது. இது தொடர்பாக பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோரிடம் கருத்து கேட்கப்பட்டது.

மேலும் சட்டப்பேரவையில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் பிரநிதிகள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மருத்துவ நிபுணர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தினார்.

அனைத்து தரப்பு கருத்துக்களையும் கேட்டு அறிந்த பின்னர், இதுகுறித்த அறிக்கையை தயார் செய்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டானை சந்தித்து அமைச்சர் அன்பில் மகேஷ் அறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.

இந்நிலையில், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு பனிரெண்டாம் வகுப்பு தேர்வுகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக முதலவர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மேலும் மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்குவது என்பதனை முடிவு செய்ய, பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்து அக்குழு அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் என்று முதல்வர் கூறியுள்ளார்.

From around the web