#BREAKING: மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு..!

 
DMK-Candidate

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 2 மாநிலங்களவை எம்பி பதவிக்கு தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதன்படி வேட்பு மனு தாக்கல் செய்யவதற்கு செப்டம்பர் 22-ம் தேதி கடைசி நாளாகும். மேலும் அக்டோபர் 4-ம் தேதி காலை 9 மணியில் இருந்து மாலை 4 மணி வரை தேர்தல் நடைபெறும் என்றும், அன்று மாலை 5 மணிக்கு தேர்தல் முடிவுகள் வெளியாகும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதிமுகவின் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் ராஜினாமா செய்ததால் காலியான இடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் இரண்டு திமுக வேட்பாளர்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

DMK

அதன்படி, திமுக மருத்துவர் அணி மாநில செயலாளர் டாக்டர் கனிமொழி மற்றும் நாமக்கல் திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் கே.ஆர்.என் ராஜேஷ் இருவரும் போட்டியிடுவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த மூத்த தலைவர் என்.வி.என் சோமு மகள் டாக்டர் கனிமொழி ஆவார். இவர் கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் மாதவரம் தொகுதியிலும், 2016 தேர்தலில் தியாகராயர் நகர் தொகுதியிலும் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இருவரும் போட்டியின்றி தேர்வாகிறார்கள் என்பதால், மாநிலங்களவையில் திமுக பலம் 10 ஆக அதிகரிக்கிறது.

From around the web