கும்மிடிப்பூண்டி டயர் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து... 2 பேர் உயிரிழப்பு!!

 
Gummidipoondi

கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் உள்ள டயர் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்ததில் வடமாநில தொழிலாளர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் தனியார் நிறூவனத்திற்குச் சொந்தமான டயர் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்த தொழிற்சாலையில் பழைய டயர்களை மிகப்பெரிய ராட்ச பாய்லர்களில் போட்டு உருக்கி, அதில் இருந்து ஒரு விதமான பவுடர் தயாரிக்கப்பட்டு பிளாஸ்டிக் மூலப்பொருளுக்காக பயன்படுத்தப்படுகிறது.

இந்நிலையில் இன்று இந்த தொழிற்சாலையில் திடீரென பாய்லர் வெடித்ததில் வடமாநில தொழிலாளர்கள் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

From around the web