முன்னாள் ஒன்றிய அமைச்சருக்கும் ஆளுநர் ரவிக்கும் வித்தியாசமே தெரியாமல் போஸ்டர் அடித்த பாஜக துணைத் தலைவர்!

 
TN-BJP

தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் ஆர்.என்.ரவிக்கு பதிலாக முன்னாள் ஒன்றிய அமைச்சருக்கு வாழ்த்துச் சொன்ன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டின் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித், பஞ்சாப் மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்த நிலையில் தற்போது அவர் பஞ்சாப் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் ஆர்.என்.ரவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்தார். அதேபோல், ஆளுநரை வரவேற்பதாக பாஜகவினர் செய்த கூத்து இணையவாசிகளிடையே நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, தமிழ்நாட்டுக்கு ஆளுநராக நியமிகப்பட்டுள்ள ஆர்.என்.ரவி யார் என்று கூட முழுவதுமாக படிக்காமல் போறகிறபோக்கில் வாழ்த்துக் கூறி, இணையவாசிகளிடம் வாங்கிக்கட்டிக்கொண்டார்.

TN-BJP

இந்நிலையில், பாஜகவின் மாநிலத் துணைத் தலைவராக உள்ள மஹாலட்சுமி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டார். அதில், தமிழக ஆளுநராகப் பொறுப்பேற்கும் மேதகு. ரவிசங்கர் பிரசாத் அவர்களை வாழ்த்தி வரவேற்கிறோம் எனக் குறிப்பிட்டு, AR.மஹாலட்சுமி., B.L.M, M.A, M.B.A, M.PHIL, R.B.P என தான் பெற்ற நீண்ட பட்டங்களையும் போட்டுள்ளார்.

இதனைப் பார்த்த நெட்டிசன்கள் இவ்வளவு படிப்பு படித்தும் சரியான புரிதலின்றி செய்தியை, முகநூலில் இப்படி பதிவிடுதா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

From around the web