தமிழ்நாடு முழுவதும் நவம்பர் 22-ம் தேதி பாஜக போராட்டம்: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவிப்பு

 
Annamalai

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நவம்பர் 22-ம் தேதி பாஜக போராட்டம் நடத்தும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்ட காரணிகளால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்தது. பல மாநிலங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100ஐ தாண்டியது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியில் முறையே ரூ.5, 10 என ஒன்றிய அரசு குறைத்தது.

அதுமட்டுமின்றி, பாஜக ஆளும் மாநிலங்கள் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியையும் குறைத்தன. இதனையடுத்து விலை எதிர்பார்த்ததை விட குறைந்ததால், வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்தனர். இதனையடுத்து விலை எதிர்பார்த்ததை விட குறைந்ததால், வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்தனர்.

இந்நிலையில், வரும் நவம்பர் 22-ம் தேதி தமிழ்நாடு அரசு பெட்ரோல், டீசல் விலை மீதான வரியைக் குறைக்க வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடைபெறும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்திக்கையில் தெரிவித்துள்ளார்.

From around the web