பாஜக மட்டுமே தமிழ்நாடு நலனுக்கான கட்சி: ஜேபி நட்டா

 
JP-Nadda

பாஜக மட்டுமே தமிழ்நாடு நலனுக்கான கட்சி என்று பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா கூறியுள்ளார்.

பாஜகவின் தேசிய தலைவர் ஜேபி நட்டா தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். திருப்பூரில் மூன்று நிகழ்ச்சிகளில் ஜேபி நட்டா கலந்து கொள்கிறார்.

இதற்கிடையே, பாஜகவின் மாநில செயற்குழு கூட்டம் திருப்பூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அப்போது கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா பேசியதாவது,

“ஒருவன் தன் திறமையால் உயர முடியும் என்ற ஜனநாயக நெறிமுறைகள் பாஜகவில் மட்டுமே உள்ளது. வெளிப்படையான ஆட்சியை பாஜக விரும்புகிறது. தமிழ்நாடு வளர்ச்சிக்கும், தமிழ் கலாச்சாரத்துக்கும் , தமிழ் மொழி வளர்ச்சிக்கும் பாஜக துணை நிற்கும் தமிழை உலக அரங்கிற்கு பிரதமர் மோடி கொண்டு சென்றுள்ளார். பாஜக மட்டுமே தமிழ்நாடு நலனுக்கான கட்சி. திமுக தமிழ்நாட்டு கலாச்சாரத்தை, பண்டிகையை மாற்ற முயல்கிறது.

கொரோனா காலத்தில் கோவிலுக்கு செல்ல அனுமதிக்காமல் செய்தது திமுக, பாஜக போராட்டத்திற்கு பின்னே அனுமதித்தது.

கொரோனா தொற்று உச்சம் தொட்ட போது 9 மாத காலத்தில் தீவிரமாக செயல்பட்டு தடுப்பூசி மூலம் அதனை ஒழித்தவர் மோடி லட்சக்கணக்கான உயிர்களை பாதுகாத்தார். எதிர்கட்சிகள் அதனை மோடி ஊசி , பாஜக ஊசி என பயமுறுத்தி பிரச்சாரம் செய்தனர். 108 கோடி பேருக்கு மேல் இன்று தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.” எனக் கூறினார்.

From around the web