செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தில் பாரத் பயோடெக் அதிகாரிகள் ஆய்வு!

 
HLL

செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி உற்பத்தி மையத்திற்கு பாரத் பயோடெக் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.

செங்கல்பட்டில் உள்ள எச்.எல்.எல். தடுப்பூசி உற்பத்தி நிறுவனத்தில் கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதற்கான பணியை தொடங்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அந்த நிறுவனத்தை நேரில் சென்று பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின், இது குறித்து பிரதமர் மோடிக்கு கடிதமும் அனுப்பியுள்ளார்.

இதனை தொடர்ந்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் பாரத் பயோடெக் நிறுவன அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பாரத் பயோடெக் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குனர் சுஜித்ரா இலா, செயல் இயக்குனர் சாய் பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் செங்கல்பட்டு திருக்கழுக்குன்றத்தில் அமைந்துள்ள மத்திய அரசின் எச்.எல்.எல். பயோடெக் நிறுவனத்தின் தடுப்பூசி உற்பத்தி மையத்தில் கோவக்சின் தயாரிப்பது குறித்து பாரத் பயோடெக் நிறுவன அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில் பாரத் பயோடெக் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குனர் சுஜித்ரா இலா தலைமையில் 5 பேர் கொண்ட குழு, இன்று செங்கல்பட்டு எச்.எல்.எல். நிறுனத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.

From around the web