அடேங்கப்பா... ஹெல்மெட் போடலயாமா... ஆட்டோ ஓட்டுநருக்கு ரூ.200 அபராதம்..!

 
Kumbakonam

கும்பகோணத்தில் ஓடும் ஆட்டோவிற்கு மதுரை போக்குவரத்து போலீசார் ஹெல்மெட் அணியாமல் ஆட்டோ ஓட்டியதாக அபராதம் விதித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மேட்டுத்தெருவில் வசிப்பவர் குருநாதன். ஆட்டோ டிரைவரான இவர் 20 வருடங்களுக்கு மேலாக ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்நிலையில் கடந்த 5-ந் தேதி இரவு 7 மணியளவில் அவருக்கு குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது.

அதில் மதுரை ஒத்தக்கடை பகுதியில் சென்றதாகவும், வாகனத்திற்கு முறையான ஆவணங்கள் இல்லை எனவும், ஹெல்மெட் போடவில்லை எனவும் தெரிவித்த போக்குவரத்து போலீசார் 200 அபராதம் விதித்து நோட்டீஸ் அனுப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக குருநாதன் கும்பகோணம் போக்குவரத்து போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

From around the web