தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பிற்கான செமஸ்டர் தேர்வு தேதி அறிவிப்பு

 
Anna University

பொறியியல் படிப்பிற்கான செமஸ்டர் தேர்வு டிசம்பர் 13-ம் தேதி தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பு குறைந்ததையடுத்து தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதேபோல், கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் இல்லாமல் நேரடியாக தேர்வு மையங்களில் நடத்தவும் கல்லூரி நிர்வாகங்கள் திட்டமிட்டு வருகின்றன.

இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் படிப்பிற்கான செமஸ்டர் தேர்வு துவங்கும் தேதியை அண்ணா பல்கலைக்கழகம் இன்று அறிவித்துள்ளது.

அதன்படி, பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் டிசம்பர் 13-ம் தேதி தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் இன்று அறிவித்துள்ளது. டிசம்பர் 13-ம் தேதி தொடங்க உள்ள தேர்வுக்கான விரிவான அட்டவணை விரைவில் வெளியிடப்பட உள்ளது.
மேலும், இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு இன்டர்னல், வைவா, செமஸ்டர் என அனைத்து தேர்வுகளும் நேரடியாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web