தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக நாளை மறுநாள் அனைத்துக்கட்சி கூட்டம்

 
TN Election

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக நாளை மறுநாள் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மாநில தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் புதிதாக அமைக்கப்பட்ட வேலூர், நெல்லை, விழுப்புரம், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் விரைவில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.

செப்டம்பர் மாதம் 15-ம் தேதிக்குள் தமிழ்நாட்டில் விடுபட்ட மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தி முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இதனைத்தொடர்ந்து, உள்ளாட்சி தேர்தல் நடத்தும் பணியில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வந்தது. இதனிடையே  சமீபத்தில் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் விவரங்கள் வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக வரும் 6-ம் தேதி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன், மாநில தேர்தல் ஆணையம் ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது.

இதன்படி சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் வரும் திங்களன்று (செப்., 6) மதியம் 12 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

From around the web