10 மற்றும் 11-ம் வகுப்பு தனித்தேர்வர்கள் அனைவரும் ஆல் பாஸ்: தமிழ்நாடு அரசு

 
Handicapped-Exam

10 மற்றும் 11-ம் வகுப்பு துணைத்தேர்வுகளை தனித்தேர்வர்களாக எழுத விண்ணப்பித்த மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் சற்று அதிகரித்ததை தொடந்து, 12-ம் வகுப்பு வரையிலான பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டது. அவர்களின் முந்தைய தேர்வுகள் அடிப்படையில் மதிப்பெண் கணக்கிட வழிகாட்டுநெறிமுறைகள் வெளியிடப்பட்டன.

இந்நிலையில், 10 மற்றும் 11-ம் வகுப்பு துணைத்தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்த மாற்றுத்திறனாளி தனித்தேர்வர்கள் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி பெற்றவர்கள் என்று தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்குவது போல இருப்பதால்,  10 மற்றும் 11-ம் வகுப்பு மாற்றுத்திறனாளி தனித்தேர்வர்கள் அனைவரும் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளித்து தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

From around the web