அதிமுக வழிகாட்டுதல் குழு உறுப்பினர் சோழவந்தான் மாணிக்கம் பாஜகவில் இணைந்தார்

 
ADMK-MLA-join-in BJP

அதிமுகவின் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவில் இடம் பெற்றுள்ள சோழவந்தான் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ மாணிக்கம் பாஜகவில் இணைந்தார்.

அதிமுக வழிகாட்டுதல் குழுவில் இடம் பிடித்து இருந்த சோழவந்தான் தொகுதியின் முன்னாள் ஏம்.எல்.ஏ மாணிக்கம் பாஜகவில் இணைந்தார்.  பாஜகவின் தேசிய தலைவர் ஜேபி நட்டா தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். திருப்பூரில் மூன்று நிகழ்ச்சிகளில் ஜேபி நட்டா கலந்து கொள்கிறார்.  

இதற்கிடையே, பாஜகவின் மாநில செயற்குழு கூட்டம் திருப்பூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. இதில், அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் நிர்வாகிகள் சிலர் பாஜகவில் இணைந்தனர்.

குறிப்பாக  அதிமுகவின் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவில் இடம் பெற்றுள்ள சோழவந்தான் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ மாணிக்கம் பாஜகவில் இணைந்தார். அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்று வரும் நிலையில், அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளாத மாணிக்கம், பாஜகவில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

From around the web